रविवार, सितंबर 06 2026 | 12:21:07 AM

टैग: chairmanship

மத்திய அறங்காவலர் வாரியத்தின் (CBT), 236 – வது கூட்டம் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது

மத்திய அறங்காவலர் வாரியத்தின் 236-வது கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சரும், மத்திய அறங்காவலர் வாரியத்தின், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் துணைத் தலைவருமான செல்வி ஷோபா கரண்ட்லஜே, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளரும், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் மத்திய தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைவருமான திருமதி சுமிதா தவ்ரா, மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் மற்றும் உறுப்பினர் செயலர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய அறங்காவலர் வாரியத்தின் கடைசி கூட்டத்திற்குப் பிறகு தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தானியங்கி முறையில் உரிமைத் தொகை மீதான கோரிக்கைகளுக்கு சேமநல நிதியில் சேமிக்கப்பட்டுள்ள தொகைகளை வழங்கும் வசதியைப் பெறுவதற்கான உச்சவரம்புத் தொகை 50,000 ரூபாயிலிருந்து  1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இது வீட்டுவசதி, திருமணம், கல்வி போன்ற செலவுகளுக்கான முன்பணத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.15 கோடி ரூபாய் அளவிலான உரிமை கோரல் மனுக்களுக்கு தானியங்கி முறையில் தீர்வு செய்யப்பட்டுள்ளன. 2024 - ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உரிமை கோரல் மனுக்களின் நிராகரிப்பு விகிதம் 14% ஆக குறைந்துள்ளதற்கு வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது. 2023-24 - ம் நிதியாண்டில், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு 1.82 லட்சம் கோடி ரூபாய்க்கான  4.45 கோடி உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.57 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் 3.83 கோடி ரூபாய்க்கான உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளன. CITES 2.01 திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின்  வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2.01 புதிய இயக்க முறைமை பயன்படுத்தப்படுகிறது, இது இழப்பீட்டுச் செயல்முறையை எளிதாக்கும். புதிய மென்பொருள் தொகுப்பு பொதுவான கணக்கு எண் (யுஏஎன்) அடிப்படையிலான கணக்கியலை சாத்தியமாக்கும், இதன் விளைவாக ஒரு உறுப்பினர், ஒரு கணக்கு முறை உருவாகும், இதன் மூலம் இழப்பீடு தீர்ப்பதில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும்.…

Saransh Kanaujia

કેન્દ્રીય ટેક્સટાઈલ મંત્રી ગિરિરાજસિંહના અધ્યક્ષસ્થાને સુરતમાં ‘ભારત ટેક્સ-2025’ અંતર્ગત રોડ શો યોજાયો

પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીનાં 5એફનાં વિઝનથી પ્રેરિત અને ફેબ્રુઆરીમાં નવી દિલ્હી અને…

Saransh Kanaujia